ராஜாங்க அமைச்சருக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

353 0

அரச வாகனம் ஒன்றை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழு ராஜாங்க அமைச்சர் ஏ.எச் பௌசிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு கொழும்பு முதன்மை நீதவான் லால் ரணசிங்ஹ பண்டார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதி ராஜாங்க அமைச்சருக்கு எதிராக நிலவும் நான்கு குற்றச்சாட்டுக்கள் வாசிக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 2 கோடி ரூபா பெறுமதியான வாகனம் ஒன்று அப்போதைய விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரின் பிரதிவாதியினால் தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 10 லட்சம் ரூபா அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பிரதிவாதி சார்பில் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்ணாண்டோ அடிப்படை எதிர்ப்பினை முன்வைத்துள்ளார்.

தமது சேவையாளருக்கு எதிராக சட்டத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணாக குறற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளார்.

இதற்கமைய பிரதிவாதி சட்டத்தரணியின் அடிப்படை எதிர்ப்பு தொடர்பான உத்தரவை எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி பிறப்பிக்கவுள்ளதாக கொழும்பு முதன்மை நீதவான் லால் ரணசிங்ஹ பண்டார தெரிவித்துள்ளார்.