2016 ஆம் ஆண்டு செல்வந்த கட்சியான மக்கள் விடுதலை முன்னணி

319 0

2016 ஆம் ஆண்டு இந்நாட்டின் செல்வந்த கட்சி, மக்கள் விடுதலை முன்னணி என கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆறு பிரதான அரசியல் கட்சிகளினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள நிதி அறிக்கைக்கு அமைய 2015 ஆம் ஆண்டு நிறைவின் போது, மக்கள் விடுதலை முன்னணியின் வருமானம் 8 கோடியே 71 லட்சத்து 96 ஆயிரத்து 322 ரூபாய் என அந்த அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கீர்த்தி தென்னகோண் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் வருமானம் 3 கோடியே 63 லட்சத்து 17 ஆயிரத்து 486 ரூபாய் ஆகும்.

இதனுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வருமானம் ஒரு கோடியே 97 லட்சத்து 96 ஆயிரத்து 9 ரூபாய் என அவர் குறிப்பிட்டுள்ளார்.