இன்னும் இரண்டு விசாக பூரணை தினங்களுக்கு பிறகு மகிந்த ராஜபக்ஷவிற்கு அழவேண்டிய நிலை ஏற்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.கிரிபத்கொடவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
இரண்டு விசாக பூரணைகளின் பின்னர் ஆட்சியை கைப்பற்றுவதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார்.
அடுத்துவரும் இரண்டு வெசாக் பூரணைகளின் பின்னர் அரசாங்கம் முன்னெடுத்துவரும் திட்டங்களின் பிரதிபலன்கள் கிடைக்க ஆரம்பிக்கும்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில், கடன் மற்றும் மனித உரிமைகள் என குணப்படுத்திக்கொள்ள முடியாத இரண்டு நோய்கள் இருந்தன.
மனித உரிமைகள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடன்களை விரைவில் செலுத்துவதற்கும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிலையில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பதாக மஹிந்த வெட்கமின்றி ஏன் பேசுகிறார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

