கொழும்பில் இன்று நீர்விநியோக தடை

307 0
கொழும்பில் பல பகுதிகளில் இன்று 18 மணி நேர நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக  தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய பேஸ்லைன் வீதி, களனி பாலம் தொடக்கம் தெமட்டகொட சந்தி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நீர்விநியோகத்தடை ஏற்படும்.
அத்துடன், பலாமரச்சந்தி, கிரான்ட்பாஸ், மஹவத்த மற்றும் தொட்டலங்க பகுதிகளிலும் நீர்விநியோகத்  தடை அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று முற்பகல் 9.00 மணி முதல் நாளை அதிகாலை 3.00 மணி வரை குறித்த பிரதேசங்களில் நீர்வெட்டு அமுலில் இருக்கும்.
அம்பதளை நீர்சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து எலிஹவுஸ்  பகுதிக்கு நீர் கொண்டு செல்லும் பிரதான நீர்க்குழாயில் திருத்த பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் இந்த நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படுவதாக வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.