புதுவருடத்தில் 5,600 பஸ்கள் சேவையில்!

303 0

புதுவருட, வசந்தகாலத்தில், பயணிகளுக்கு சலுகைகளை ஏற்படுத்தும் முகமாக, இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான 5,600 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தலைவர் ரமல் சிறிவர்த்தன, இன்று (04) தெரிவித்தார்.

இந்த சிறப்பு பஸ் சேவைகள், நாளைமறுதினம் (06) முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் ஏப்ரல் 25ஆம் திகதி வரை செயற்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்வோரின் சிரமங்களை குறைப்பதற்காக, 6ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை, 3,900 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

மேலும், கொழும்புக்குள் சேவைகளை ஏற்படுத்துவதற்காக, 1,700 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன” என்று அவர் மேலும் கூறினார். இதேவேளை, இலங்கை போக்குவரத்துச் சபையில் பணியாற்றும் சாரதிகள், நடத்துநர்கள், தொழில்நுட்ப ஊழியர்களது அனைத்து விடுமுறைகளும், 6ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஊழியர்கள், 14 மற்றும் 15ஆம் திகதிகளில் மாத்திரம்இ சுழற்சிமுறையின் அடிப்படையில் விடுமுறைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.