நுகர்வோர் சட்டம் மீறப்பட்டால் அவசர இலக்கத்திற்கு அழைக்கவும்

311 0

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தில் சந்தையில் பிரச்சினைகளை குறைத்துக் கொண்டு நுகர்வோரை மோசடி வர்த்தகர்கள் மற்றும் முறைகேடான சேவை வழங்குனர்களிடம் இருந்து பாதுகாப்பதற்கு நாடளாவிய ரீதியாக விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வர்த்தக மற்றும் கைத்தொழில் விவகார அமைச்சர் ரிஸாட் பதியுதீனால் இது தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவரது அமைச்சு தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் அமைச்சருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நாடளாவிய ரீதியாக மோசடியாக செயற்படும் அனைத்து வர்த்தக நிலையங்களையும் சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலகரட்ன தெரிவித்தார்.

ஏதேனும், சேவை வழங்கும் நிலையங்கள் நுகர்வோர் சட்டத்தை மீறி செயற்பட்டால் அது தொடர்பாக அவசர இலக்கமான 1977 என்ற தொலைபேசி எண்ணுக்கு நுகர்வோர் அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.