வவுனியா பறயனாளங்குளத்தில் புகையிரதம் மோதியதில் யானையொன்று உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த யானையின் வயிற்றில் இருந்த குட்டியும் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது,
கொழும்பில் இருந்து நேற்று அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதமே வவுனியா பறயனாளங்குளம் பகுதியில் யானையுடன் மோதியுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த யானையை மீட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர், அதனை அங்கிருந்து அகற்றியுள்ளனர்.

