கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் நெல் அறுவடை செய்யும்; பாரிய இயந்திரத்தை ஏற்றிவந்த உழவு இயந்திரத்தின் முன் டயர் கழன்றமையால் உழவு இயந்திரம் தடம்புரண்டு நெல் அறுவட செய்யும் இயந்திரமும் நடுவீதியில் குடைசாய்ந்து விபத்துள்ளாகியுள்ளது.
காத்தான்குடி பிரதான வீதியில் மீராபாலிகா தேசிய பாடசாலைக்கு முன்னால் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இருவாகனங்களும் பெரும் சேதத்திற்குள்ளாகின.
குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
போலநறுவையில் இருந்து – சம்மாந்துறைக்கு நெல் அறுவடை செய்யும் பாரிய இயந்திரத்தை ஏற்றிவந்த உழவு இயந்திரத்தின் முன்பக்க சில்லே கழன்றுள்ளது.
பிரதான வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றமையால் அதிகாலையில் சிலமணிநேரம் போக்குவரத்திற்கு தடைஏற்பட்டது.
விபத்தில் சாரதியும் உதவியாளரும் தெய்வாதீனமான உயிர் தப்பினர்.


