தேசத்துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வைகோ புழல் சிறையில் அடைக்கப்பட்டார்!

226 0

மதிமுக பொதுச் செயலர் வைகோ தேசத் துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை 15 நாட்களுக்கு நீதிமன்ற தடுப்புக்காவலில் வைக்குமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக உரையாற்றியதாக அப்போதைய தி.மு.க. அரசு வைகோ மீது வழக்கு தொடர உத்தரவிட்டது.

இதனையடுத்து, வைகோ மீது பொலிஸார் தேச துரோக வழக்கு பதிவு விசாரணைகளை முன்னெடுத்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூரில் உள்ள நீதாவன் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், குறித்த வழக்கு மீண்டும் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே 13ஆவது குற்றவியல் நடுவர் மன்ற நீதவான் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.