வலி.மேற்கில் புகையிலை செய்கைக்கு வருகிறது தடை

225 0
2020 இல் போதையற்ற நாடாக இலங்கையை மாற்ற அனைவரும் துடிப்புடன் இயங்கும் போது   வலி.மேற்கில் புகையிலைச் செய்கைக்கு அனுமதியளிக்கப்படமாட்டது என வலி.மேற்கு பிரதேச செயலர் அ.சோதிநாதன் தெரிவித்துள்ளார். எனவே விவசாயிகள் உணர்ந்து சமூகத்தின் நன்மை கருதி மாற்று உற்பத்தியில் ஈடுபட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வலி.மேற்கு விவசாயிகளுக்கான விழிப்புணர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில் இதனை குறிப்பிட்டுள்ளார். சில விவசாயிகள் சமூகத்தின் தீங்கானபோதையை உருவாக்கும் புகையிலை உற்பத்திகளில் ஈடுபடுகின்றனர். வருமானத்தை ஈட்டி பணக்காரனாக வருவதற்காக இச் செய்கையை மேற்கொள்கின்றனர். எனவே புகையிலைச் செய்கையை மேற்கொள்பவர்கள் அதனைக் கைவிட்டு வலுவூட்டுகின்ற உற்பத்திகளில் ஈடுபட்டு நல்லதொரு விவசாயிகளாக மாறுமாறு கோருகின்றேன்.
புகையிலை உற்பத்திக்கு அதிகரித்த யூரியா, கிருமிநாசினி பிரயோகம் என்பனவற்றால் சூழலும், நிலத்தடி நீரும் அபாயகரமானதாக மாறுகிறது. இதனால் புகையிலை உற்பத்தியை வலி.மேற்கில் தடைசெய்துள்ளேன் என்றார்