சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தை தடைசெய்யுமாறு கோரி மேற்கொள்ளப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் இன்று இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
இன்று கூடவுள்ள மருத்துவ சபை உயர்மட்ட குழுக் கூட்டத்தில் இது தொடர்பான இறுதித் தீரமானம் மேற்கொள்ளப்படும் என சங்கத்தின் இணைப்பாளர் நலிந்த ஹேரத் இதனை தெரிவித்தார்.
இதேவேளை சைட்டம் தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில மக்களை தெளிவுபடுத்துவதற்காக இன்று முதல் நாடு முழுவதும் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

