அரசாங்கமும் சட்டமா அதிபர் திணைக்களமும் ஆட்சியில் இருந்துகொண்டு ஊழல்களில் ஈடுபடுகின்றவர்களை பாதுகாக்க முயற்சிப்பதாக ஜே வி பி குற்றம் சுமத்தியுள்ளது.
பொலனறுவையில் நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் ஜே வி பியின் மாகாண சபை உறுப்பினரான வசந்த சமரசிங்க இதனை தெரிவித்தார்.
குற்றவாளிகளை தண்டிப்பதும் அவர்களுக்கு பிணை கொடுப்பது சிறையில் அடைப்பது என அனைத்து விடயங்ளும் வெளிவாரியான ஒரு சக்தியினால் கட்டுப்படுத்தப்பட்டுவருகின்றது.
குற்றவாளிகளை தண்டிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் குற்றவாளிகளை காப்பற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.
இந்த நிலையில் திருடர்களை கண்டுபிடிக்க வேண்டிய காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவதாக வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

