தமிழ் மக்களும் காணிகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர் – அமைச்சர் ராஜித்த

315 0

புதிய அரசியல் அமைப்பில் அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போது, மக்கள் கருத்து கணிப்பொன்று நடத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு முகம் கொடுக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட்ட அனைத்து தலைவர்களும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜித்த சேனாரத்தின வவுனியா மருத்துவமனையில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இதனை தெரிவித்தார்.

இதேவேளை, வில்பத்து பிரச்சினையை இனவாத சிந்தனையுடன் நோக்க கூடாது என ராஜித்த சேனாரத்தின குறிப்பிட்டார்.

வில்பத்தை அண்மித்த பகுதிகளில் மீள் குடியேற்றம் செய்யப்படுகின்ற போது ஏதேனும் தவறுகள் ஏற்பட்டிருப்பின் அவற்றை நிவர்த்தி செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்ட பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அத்துடன் தமிழ் மக்களும் காணிகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

அவர்களுடைய காணிகள் இராணுவ முகாம்களாக ஆக்கப்பட்டுள்ளன.

அவர்களது காணிகளும் விடுவிக்கப்பட்டு, முடிந்தளவு அவர்களுக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என அமைச்சர் ராஜித்த சேனாரத்தின குறிப்பிட்டார்.