தென்கொரிய சரக்கு கப்பல் 22 பேருடன் காணாமல் போயுள்ளது

314 0

தென்கொரியாவிற்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று 22 பேருடன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் இருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு நியூசிலாந்து அருகே உள்ள மார்சல் தீவுக்கு சென்று கொண்டு இருந்த இந்த கப்பல், உருகுவே அருகே வைத்தே காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த கப்பல் சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் டொன் ஏற்ற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது காணாமல் போன 22 ஊழியர்களில் 14 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டையும், 8 பேர் தென் கொரிவையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.