உயர்கல்வி அமைச்சராக எஸ் பி திஸாநாயக்க நியமிக்கப்படுவார்?

239 0

எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின் போது எஸ்.பி திஸாநாயக்க உயர்கல்வி அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அண்மையில் ஜனாதிபதியும் பிரதமரும் சந்தித்த வேளையில் இதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும் இது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்று எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவரே மாலபே தனியார் மருத்துவக்கல்லூரிக்கும் ஆதரவை வழங்கினார்.இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்வரும் மேதின நிகழ்வை கண்டியில் நடத்த எஸ்.பி திஸாநாயக்கவுக்கே பொறுப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் திஸாநாயக்க உயர்கல்வி அமைச்சராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.