குற்றம் சாட்டப்பட்டுள்ள கடற்படை அதிகாரியை காப்பாற்ற முயலும் கடற்படை தளபதி!

229 0

போர் நிகழ்ந்த காலத்தில் கொட்டாஞ்சேனையில் இருந்து இரண்டு தமிழர்களைகடத்திச்சென்ற சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள கடற்படைஅதிகாரியை காப்பாற்ற கடற்படை தளபதி முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆங்கில செய்தித்தாளில் இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் உதவியுடன் இந்தகடத்தல் சம்பவம் இடம்பெற்றதாக குற்றப் புலனாய்வுத் துறையினர் நீதிமன்றத்தில்தெரிவித்துள்ளனர்.2009 ஜனவரி 11ம் திகதியன்று லோகநாதன் மற்றும் ரத்னசுவாமி ஆகிய இருவரும்வத்தளையில் வைத்து கடற்படையினரால் கடத்தப்பட்டனர்.

கடத்தப்பட்ட இரண்டு தமிழர்கள் பயணித்த வாகனத்தின் பாகங்கள் வெலிசற கடற்படைமுகாமில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

எனினும் கடத்தப்பட்ட லோகநாதனின் மனைவியிடம் வாக்குமூலத்தை பெறுவதற்கு அந்நாள்பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதிவழங்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த இரண்டு தமிழர்களையும் கடத்திய கடற்படை அதிகாரியைநீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் துறையினர் கடற்படை தளபதிக்குகடிதம் அனுப்பியுள்ள போதிலும் குறித்த அதிகாரி நீதிமன்றத்தில்முன்னிலைப்படுத்தப்படவில்லை.