தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு துரிதமாக தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பட்டதாரிகளுக்கு முறையான வகையில் தொழில்களை பெற்றுக்கொடுக்காமை காரணமாக அவர்கள் தற்போது பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
எவ்வாறாயினும், நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக முறையான திட்டத்திற்கு அமைவாக பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
திருகோணமலை மெக்கெய்ஷர் விளையாட்டரங்கில் நேற்று (01) நடைபெற்ற “2017 தேசிய இளைஞர் நகரம்” நிகழ்வில் கலந்துகொண்டு நிறைவுரையை ஆற்றிய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கருத்தை முன்வைத்தார்.
இதன்போது, இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை கட்டியெழுப்பும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

