தமிழீழ நாட்டுக்கு தான் தப்பி செல்லப் போவதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி

237 0

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட்டு வெற்றி பெற்றால், உருவாகப் போகும் தமிழீழ நாட்டுக்கு தான் தப்பி செல்லப் போவதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

அந்த தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச பௌத்த வாக்குகள் மூலம் மாத்திரமே வெற்றிப்பெற வேண்டும் என்பதே தனது பிரார்த்தனை எனவும் அவர் கூறியுள்ளார்.

அப்படி நடந்தால், பௌத்தர்கள் அல்லாத மக்கள் சமூகத்தில் இருந்து ஒதுங்கி கொள்வார்கள் எனவும் நிர்மால் ரஞ்சித் தேவசிறி தனது முகநூல் கணக்கில் கூறியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச சிங்கள பௌத்த வாக்குகளின் மூலம் மாத்திரமே வெற்றிப் பெற வேண்டும் என்பது எனது பிரார்த்தனை. நான் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளருக்கு வாக்களிப்பேன்.

அவர் போதிய வாக்குகளை பெற மாட்டார். அப்போது சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்கள், சமூகத்தில் இருந்து ஒதுங்கி விடுவார்கள். தற்போது வலுவிழந்திருக்கும் வடக்கு, கிழக்கை அடிப்படையாக கொண்ட தனிநாட்டு கோரிக்கை வலுப்பெறும். நான் கடந்த வாரம் ஜெனிவாவில் இருந்தேன்.

அப்போது ஐக்கிய நாடுகள் தலைமையகத்திற்கு எதிரில் நடந்த தமிழ் தேசிய கண்காட்சியில் ஒரு பதாகையை பார்த்தேன். அதில் தனித் தமிழீழ நாடு வேண்டும் என எழுதப்பட்டிருந்தது. கோத்தபாய ஜனாதிபதியாக தெரிவானால், இந்த கோரிக்கைக்கு சர்வதேசத்தின் ஆதரவு பெருகும். அந்த நேரத்தில் எம்மை போன்றவர்களுக்கு கட்டாயம் வாழ வேண்டும் என்ற தேவை இருந்தால், உறவினர்கள், நண்பர்களை அழைத்துக்கொண்டு நாட்டில் இருந்து வெளியேற நேரிடும்.

குறைந்தது உருவாக போகும் தமிழீழ நாட்டுக்காவது தப்பிச் சென்றாக வேண்டும். முன்னேறிய அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் இதுதான் நடக்க வேண்டும். கோத்தபாய வெற்றி பெறும் அளவுக்கு சிங்கள பௌத்த வாக்குகள் கிடைக்காது போனால், தெற்கில் அரசியல் நெருக்கடி மேலும் அதிகரிக்கும். ரணில் விக்ரமசிங்க அப்போது உருவாக்கும் சிறுபான்மை அரசாங்கத்தினால், அந்த நெருக்கடியை எப்படியும் சமாளிக்க முடியாது போகும்.

எனது மதிப்பீட்டின்படி 2015 ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நடந்த புரட்சி பயணத்தின் கரு கலைக்கப்பட்டுள்ளது. இதனால், ஜனவரி புரட்சியின் எதிர்காலம் தொடர்பாக தொடர்ந்தும் எதிர்பார்ப்பை கொண்டிருப்பது பிரயோசனம் இல்லாதது என நிர்மால் ரஞ்சித் தேவசிறி குறிப்பிட்டுள்ளார்.