அங்கீகாரம் கிடைத்த பின்னரே செயற்பாடுகளை செய்வோம் என்று நினைப்பது ஒருபோதும் செயற்பாட்டை செய்யவே விடாது.

336 0

தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களிற்கு கிடைத்த அங்கீகாரம் என்பது அவரின் நன்கு திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்ட தீவிரமான, உறுதியான செயற்பாடுகளின் விளைவாகவே பெற்றுக்கொள்ளப்பட்டது. தேசியத்தலைவர் போராடப்புறப்பட்டது 70களின் ஆரம்பத்தில். அவருக்கான ஓரளவு சிறிது அங்கீகாரம் கிடைத்ததோ 1985களில்!
13வருடங்கள் எந்தவித அங்கீகாரமும் இன்றி இம்மியளவும் சளைப்புமின்றி போராடிய அவரின் தவம் எத்தனை உயர்ந்தது பாருங்கள். இந்த உயர்ந்த புரட்சிக்குணமே அவரை தேசியதலைவராக பல லட்சம் மக்களின் மனங்களுக்குள் எழுந்துநிற்க வைத்தது.

அங்கீகாரம் கிடைத்த பின்னரே செயற்பாடுகளை செய்வோம் என்று நினைப்பது ஒருபோதும் செயற்பாட்டை செய்யவே விடாது. அது நீந்தப்பழகிய பின்னரே நீருக்குள் இறங்குவதுபோலானது முயற்சி திருவினையாக்கும் என்பதை பாடப்புத்தகத்தில் கற்றறிந்தோம். ஆனால் அதை நேரிடையாக பார்க்கும் பேறுபெற்றோம். அது தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் காலமாக இன்றுவரையும், என்றுமே எம்மை வழிநடத்துவார்.