களுத்துறை சம்பவம் – கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்

362 0

களுத்துறை சிறைச்சாலை பேருந்து துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட சிற்றூர்ந்தை மறைத்து வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர்கள், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட சிற்றூர்ந்தை தீ வைக்குமாறு, அங்கொட லொக்கா கூறியதை, அவரின் தரப்பினர் பின்பற்றவில்லை என அறியமுடிகின்றது.

குறித்த சிற்றூர்ந்தை தீ வைப்பதற்கு பதிலாக, ஹொரணை, மொரகஹஹேன பகுதியில் அவர்கள் கைவிட்டுச் சென்றதாக கண்டறியப்பட்டுள்ளது.

களுத்துறை சிறை பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, பாதாள உலக குழுத் தலைவர் சமயங் உள்ளிட்ட 7 பேர் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.