ராமநாதன் கண்ணன், மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பாக மேலதிக கலந்துரையாடல் இன்று

345 0

மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரான ராமநாதன் கண்ணன், மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பாக மேலதிக கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் விசேட மாநாடு இன்று இடம்பெறவுள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்தக் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.

குறித்த நியமனம் சட்டத்தின் முன்னாள் செல்லுபடியற்றது மற்றும் அதிகாரமுடைய பரிந்துரை அல்ல என நீதிச் Nசுவை ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று இந்த விடயம் குறித்து ஆராயப்படவுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.