வெளிநாட்டு நீதிபதிகளுக்கு ஒருபோதும் இடமில்லை – அரசாங்கம் மீண்டும் அறிவிப்பு

246 0

வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு ஒருபோதும் உள்ளகவிசாரணைகள் மேற்கொள்ளப்படாது என்று அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது.

அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் சர்வதேச கண்காணிப்பாளர்களை நாட்டுக்குள் அனுமதித்தால் பாதகமான விளைகள் ஏற்பட்டன.

சர்வதேச தரப்பினரைக் கொண்டு உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் தயாராக இல்லை.

இந்த விடயங்கள் உள்ளக பொறிமுறைகளின் ஊடாக உள்நாட்டு விசாரணைகளின் ஊடாகவே தீர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.