சமூகத்தில் மாற்றுவலுவுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது – ஸ்ரீதரன்

491 0

எமது சமூகத்தில் மாற்றுவலுவுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதிகரித்துள்ள மாற்றுவலுவாளர்கள் குடும்பங்கள் தமது அன்றாட ஜீவனோபாயத்திற்காக அனுபவிக்கும் அவலங்கள் அளவில்லாதவை.

நெஞ்சு கனக்கின்ற சுமைகளை நீங்கள் தாங்கியிருக்கிறீர்கள் ஒரு தேசத்தின் காலப்பணியை சுமந்ததினால்த்தான் மாற்றுவலு நிலை ஏற்பட்டிருக்கிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

நாளந்தம் உங்களுடைய பிள்ளைகளை கற்பிப்பதற்காக சத்துள்ள உணவுகளை வழங்குவதற்காக மருத்துவச்செலவுக்காக உடைகளுக்காக என செலவுப்பட்டியல் நீண்டு செல்கிறது எத்தனை நாளைக்கு மற்றவர்களில் தங்கிவாழலாம் என்கிற மனத்துடிப்பும் உங்களிடம் இருக்கிறது எனவே நாங்கள் நிலையான மாற்றம் தொடர்பில் சிந்திக்கவும் செயலாற்ற வேண்டியகாலம் எழுந்துள்ளது.

உங்களுடைய அர்ப்பணிப்புக்களை அர்த்தமுள்ளதாக ஆக்கக்கூடிய தீர்வொன்றை காணவேண்டும் உங்களுக்கும் உங்களுடைய சங்கத்திற்கும் உதவுதல் எங்களுடைய மனிதாபிமான கடமை நீங்கள் எமது நாட்டுக்கு ஆற்றிய பணிக்கு நாங்கள் உங்களுக்கு பணிவிடை செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம்.

சிலர் இவ்விடயங்களை அரசியலாக்கவும் முனைகிறார்கள் கிளிநொச்சி நகரிலே மாற்று வலுவுள்ளோருக்கு காணி ஒதுக்கப்பட்டபோது முன்னைய ஆட்சியாளர்களும் அடிவருடிகளும் அதிகாரபலம் கொண்டு பறித்தார்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்.

இன்று டிப்போச்சந்தியிலே காணி உங்களுக்கு மீளக்கிடைத்திருக்கிறது.

மாற்றுவலுவடைய பெண்களுக்கும் நீதிமன்றத்தினருகே காணியும் கட்டடமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

உங்களுடைய அலுவலகத்தை அமைப்பதற்கும் எமது கட்சியின் உறுப்பினர்களாலே 32 இலட்சம் ரூபா ஒதுக்கப்படடிருக்கிறது.

அது தவிர புலம்பெயர்ந்து வாழ்கின்ற பலர் இந்த மண்ணைப்பற்றியும் மண்ணில் வாழ்ந்த வாழ்க்கை பற்றியும் தங்களோடு களமாடிய தோழர்கள் பற்றியும் நினைவுகளோடே வாழ்கிறார்கள்.

இன்று இந்த உதவியை வழங்குகின்றவரும் பலம்பெயர்ந்து இருக்கின்றபோதும் உங்களில் ஒருவராகவே வாழ்ந்து வருகின்றார்.

இவை எங்களுடைய மனிதாபிமான பணிகளே தவிர அரசியல் நோக்கம் கொண்ட செயற்பாடுகள் அல்ல எனவும் ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு தென்னம்பிள்ளைகள் வாழ்வாதாரமா வழங்கப்பட்டதுடன் மேலும் ஐம்பதாயிரம் ரூபா சங்கத்திற்கு வழங்கப்பட்டது.