தொலைக்காட்சிக்கு அடிமையான சேவல்

358 0

சிறுவர்கள் தொலைக்காட்சிக்கு அடிமையான காலம் மாறி சேவல் ஒன்று தொலைக்காட்சிக்கு அடிமையான சம்பவம் ஒன்று ஹெம்மாத்தகம-பெத்திகம்மான பகுதியில் பதிவாகியுள்ளது.

பெதிகம்மான பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் உள்ள இந்தச் சேவலானது கடந்த 8 மாதங்களாக தொலைக்காட்சி பார்ப்பதை பழக்கமாக்கிக் கொண்டுள்ளதாகவும், இது அதிகமாக கார்ட்டுனையே பார்ப்பதாகவும் வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சேவல் வீட்டுக்கு வெளியே இருந்தாலும் தொலைக்காட்சியின் சத்தத்தைக் கேட்டவுடன் வீட்டுக்குள் வந்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஒரு வயதான குறித்த சேவல் இரவு நேரங்களில் வீட்டிலுள்ள மேசையின் மீது உறங்குவதாகவும், இது உணவுக்காக கூட வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை என்றும் தெரிவித்துள்ள குறித்த சேவலின் உரிமையாளர்கள் இதற்கு துணையாக வீட்டில் வளர்க்கபடும் நாய் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

‘தாம் அனைவரும் இந்த சேவல் மீது அதிக பாசம் வைத்துள்ளதாகவும், எதற்காக குறித்த சேவல் இவ்வாறு நடந்துக்கொள்கிறது என்று தெரியாமல் உள்ளதாகவும் இதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.