இலங்கையில் விவசாயம், மின்சாரம் மற்றும் புதிய தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு உதவ ரஷ்யா

322 0

இலங்கையில் விவசாயம், மின்சாரம் மற்றும் புதிய தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு உதவ ரஷ்யா இணங்கியுள்ளதாக திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடீமீர் புட்டினுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நடைபெற்ற நீண்ட இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி புட்டின் இந்த இணக்கத்தை வெளியிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதனடிப்படையில், ரஷ்யாவின் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டிய துறைகள் குறித்து ஆராய ஜனாதிபதி விரைவில் குழு ஒன்றை நியமிக்க உள்ளார்.மேலும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதை மேலும் அதிகரிப்பது குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளது.

ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடியான விமான சேவைகளை ஆரம்பிக்கவும் இரண்டு தலைவர்களும் இணங்கியதாகவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.