அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் பெங்களுர் ரோயல் செலஞ்சர் அணியின் தலைவராக கோஹ்லிக்கு பதிலாக வில்லியர்ஸ் விளையாடுவார் என அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போத விராட் கோஹ்லி காயமடைந்துள்ள நிலையில்,அவரது காயம் சுகமடையாத பட்சத்தில் அவருக்குப் பதிலாக டிவில்லியர்ஸ் விளையாவார் என்றும், இன்னும் ஓரிரு நாட்களில் விராட் கோஹ்லியின் உடற்தகுதி குறித்து தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதற்காக எதிர்வரும் 2ஆம் திகதி டிவில்லியர்ஸ் இந்தியா வரவுள்ளதாகவும் வெட்டோரி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 5ஆம் திகதி பெங்களுரில் நடக்கவுள்ள முதலாவது ஐ.பி.எல்.போட்டியில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன்ரைசஸ் அணியும்,பெங்களுர் ரோயல் செலஞ்சர் அணியும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

