வரட்சி பாதிப்புக்கு இலங்கைக்கு அரிசி வழங்குகிறது பாகிஸ்தான்

200 0

இலங்கையில் வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கவுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்பின் பணிப்புக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முதற்கட்டமாக 3 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியுடன் கப்பலொன்று பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த அரிசியை, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஏப்ரல் மாத முதல் வாரத்தில் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளார்.

இதேவேளை, மிகுதியான 7 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி, ஏப்ரல் மாதத்துக்குள் கொழும்பை வந்தடையும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.