முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவுக்கு, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதிவரை வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான இன்று இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி, 61 லட்சம் ரூபாவை பலவந்தமாக பெற்றுக்கொண்டமை தொடர்பான வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

