வடகொரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 9 மலேசியர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அண்மையில் மலேசியா கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து, வடகொரிய ஜனாதிபதியின் சகோதாரர் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையை வடகொரியாவே திட்டமிட்டு மேற்கொண்டதாக மலேசிய விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் ராஜதந்திர முறுகல் ஏற்பட்டது.
இதனால் வடகொரியாவில் இருந்து குறித்த மலேசியர்களை வெளியேற தடைவிதிக்கப்பட்டிருந்தது.
தற்போது அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

