ரத்மலான மற்றும் அங்குலான தொடருந்து நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பெண்ணொருவரும் அவரது ஒருவயது மகனும் தொடரூந்தில் மோதுண்டு பலியாகினர்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்தில் தாயும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் மகனும் பலியானதாக லுனாவ மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அளுத்கமயில் இருந்து கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையம் நோக்கி பயணித்த தொடருந்தில் மோதுண்டவர்களே இந்த அனர்த்திற்கு முகங்கொடுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

