மஹிந்தாநந்த அளுத்கமகேவுக்கு வௌிநாடு செல்வதற்கு அனுமதி

223 0

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கமகேவுக்கு வௌிநாடு செல்வதற்கு கொழும்பு முதன்மை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கமகே விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைய கொழும்பு முதன்மை நீதிமன்ற நீதிவான் லால் பண்டார ரணசிங்க இன்று (31) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இன்று (31) முதல் எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை மஹிந்தாநந்தவுக்கு வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் வேறு வழக்கு ஒன்றுக்காக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்தவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக குற்றவிசாரணை திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதனை கருத்தில் கொண்டு கொழும்பு முதன்மை நீதிமன்ற நீதிபதி, அழைப்பாணை விடுக்கப்பட்ட தினத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கமகே மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

மஹிந்தாநந்த அளுத்கமகே, விளையாட்டுத் துறை அமைச்சில் பணியாற்றிய போது பாடசாலைகளுக்காக விளையாட்டு உபகரணங்களை வழங்கும் போர்வையில் அமைச்சின் நிதியை பயன்படுத்தி விளையாட்டு உபகரணங்களை பெற்று அவற்றை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தியதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இதன்படி அவர் ரூபாய் 5 கோடிக்கும் அதிகமான நிதியை மோசடியான வகையில் பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது