1.3 கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப் பொருள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளது

334 0

சுமார் 1.3 கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப் பொருள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.

பிளை டுபாய் விமானத்திலிருந்தே குறித்த போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி 14 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

மாலைதீவில் இருந்து இலங்கை நோக்கி வந்த பிளை டுபாய் விமானத்திலிருந்து குறித்த 1.3 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக சுங்கத்தின் பிரதி பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தார். விமான நிலைய சுங்கத்துறைக்கு கிடைத்த தகவலினி; அடிப்படையில் குறித்த போதைப் பொருள் தொகை மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிளை டுபாய் விமானம் இன்று அதிகாலை 1.05 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. போதைப் பொருளை எடுத்து வந்தவர் யாரென்பதை இதுவரை அடையாளம் காண முடியாத நிலையில் விமானப் பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.