பாதுகாப்பற்ற ரயில் கடவை பாதுகாப்பு ஊழியர்கள் 24 மணிநேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று அதிகாலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலை நிறுத்தம், நாளை அதிகாலை ஆறு மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி தகவல் தெரிவித்த பாதுகாப்பற்ற ரயில் கடவை பாதுகாப்பு ஊழியர் சங்கத்தின் செயலாளர் நிமல் சந்திரசிறி, தமது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை, ஒவ்வொரு மாதமும் இறுதி நாளன்று இதுபோன்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்தார்.

