நாமல் பாரிய மோசடி தவிர்ப்பு ஆணையகத்தில் முன்னிலையானார்

336 0

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, பாரிய மோசடிள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

தேசிய இளைஞர் சேவை சபையின் ஊழல் மோசடி குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக நாமல் ராஜபக்ஷ முன்னிலையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாநாயக்க மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக்குழு காரியாலயத்தில் இன்று (31) முன்பகல் 11.00 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் முன்னிலையானார்.