புதையல் மூலம் பெறப்பட்டது என தெரிவித்து போலியான தங்க உருண்டைகளை விற்பனை செய்ய முற்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிகம காவற்துறைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று வெலிகம மிதிமக பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது போலியான தங்க உருண்டைகள் 907 ம் மற்றும் உந்துருளியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
39 மற்றும் 22 வயதுடைய சந்தேகநபர்கள் கெகிராவை மற்றும் அஹங்கம பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.
சந்தேகநபர்கள் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

