“இரண்டு” கொலைகளுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்ட நபர் ஒருவருக்கு நேற்றைய தினம் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நீர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கருணாதிலக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொச்சிகடை பிரதேசத்தினை சேர்ந்த 33 வயதுடைய நபருக்கே இவ்வாறு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
2009 ஆண்டு காலப்பகுதியில் குறித்த கொலை சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த நபர், தனது மனைவி மற்றும் அவரது 6 வயதான மகளையும் கொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனைவி அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், 6 வயது மகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

