பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊழியர்கள் இன்று 24 மணி நேர பணி பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை 6 மணி தொடக்கம் நாளை காலை 6 மணி வரை இந்த பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊழியர்கள் ஒன்றியத்தின் செயலர் நிமல் சந்திரசிறி தெரிவித்திருந்தார்.
கடந்த வருடம் மார்ச் 31ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டம் , 31ம் திகதியுடன் முடியும் ஒவ்வொரு மாதத்திலும் 31ம் திகதி முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

