
களுத்துறை சிறைவாகனத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் வாகனத்தை போலி இலக்கத்தகடுகள் பொருத்தி மறைத்து வைத்திருந்த இருவரை காவற்துறை கைது செய்துள்ளது.
இந்த வேன் வாகனம் கடந்த மாதம் 6ம் திகதி சீதுவை பிரதேசத்தில் வைத்து கடத்தப்பட்டுள்ளது.
இதற்கு போலி இலக்கத்தகடுகளை பொருத்தியது தொடர்பில் மொரடுவை மற்றும் பண்டாரகம பிரதேசங்களில் குறித்த இரு சந்தேகநபர்களும் பெஹெலியகொட குற்றவியல் பிரிவால் கைது செய்யப்பட்டனர்.
48 மற்றும் 51 வயதுடைய குறித்த சந்தேகநபர்கள் மொரடுவை , கொரகான மற்றும் பண்டாரகம வெல்மில்ல பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.

