ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் நல்லாட்சி அரசாங்கம் நாட்டையும், இனத்தையும், எமது படையினரையும் தாரைவார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று வெளியிடப்பட்ட விசேட அறிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை இராணுவம் மேற்கொண்டதாக கூறிய சகல யுத்தக் குற்றச் சாட்டுக்களின் பட்டியலையும் நல்லாட்சி அரசாங்கத்தின் அதிகாரிகள் எந்தவித மறுப்பும் இன்றி ஏற்றுக் கொண்டது.
இராணுவத்தினருக்கு எதிராக வழக்கு விசாரணை செய்ய மாட்டோம், சர்வதேச நீதிபதிகளை வர விடமாட்டோம் என ஜனாதிபதியும், பிரதமரும் இலங்கை மக்களுக்கு எவ்வளவுதான் கூறித் திரிந்தாலும், ஜெனீவாவிவல் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட பிரேரணை இவர்களின் கருத்துக்கு முற்றிலும் வேறானது எனவும் அவர் அந்த அறிவித்தலில் மேலும் கூறியுள்ளார்.

