பாகிஸ்தானுக்கு இரண்டாவது போட்டியிலும் வெற்றி

293 0

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 132 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களை மாத்திரமே பெற்று கொண்டது.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக சடாப் கான் (Shadab Khan) நான்கு விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

நான்கு போட்டிகளை கொண்ட இருபதுக்கு இருபது கிரிக்கட் தொடரில் பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளை வெற்றி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.