அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறித்த இரகசிய தகவல் ஒன்றை வெளியிடவிருப்பதாக, முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் ஃப்லைன் தெரிவித்துள்ளார்.
அவரது சட்டத்தரணி ஊடாக காங்கிரஸ் விசாரணைக் குழுவிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடன் கொண்டிருந்த தொடர்பின் காரணமாக அவர் பதவிவிலகினார்.
டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய ஆதரவாளரான அவர், தேர்தல் காலத்தில் ரஷ்யாவுடன் உறவுகளை பேணியதாக கூறப்படுகிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா மேற்கொண்ட தலையீடுகள் தொடர்பில் காங்கிரஸ் குழு ஒன்று விசாரணை செய்யும் நிலையில், அதனிடம் அவர் உண்மை ஒன்றை கூறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமக்கு பாதுகாப்பு வழங்குமாறும் அவர் சட்டத்தரணி ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

