அரசியலமைப்பு குழுவில் மக்கள் பிரதிநிதிகள் எவரும் இல்லை.புதிய அரசியலமைப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு வேறுவிதமான பதிவே உள்ளது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.
குறைந்தபட்சம் பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரையேனும் நியமித்துள்ளார்களா? என்றால் அதுவும் கிடையாது. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவே பிரச்சினைக்குரியது. இந்தக் குழுவைக் கண்டவுடன் அதனால் தயாரிக்கப்பட்ட சிபாரிசுகளை மக்கள் புறக்கணிப்பர்.
நாட்டில் செய்ய முடியாத விடயங்களைச் சொல்லி நடைமுறைப்படுத்த முடியாது. செய்ய முடியுமானவற்றை மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் செய்ய முன்வாருங்கள். கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள், முன்னெடுப்புக்கள் குறித்த மதிப்பீடு, மக்களிடத்தில் அரசாங்கத்துக்கு நல்ல பெயர் இல்லையென்பதையே வெளிப்படுத்தியுள்ளதாகவும் கொழும்பில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் கூறினார்.

