தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி கைது

375 0

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் குயென் ஹை கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிரான முன்வைக்கப்பட்டிருந்த ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

65 வயதான அவர் தமது தோழியுடன் இணைந்து பாரிய ஊழல்களையும் அதிகார துஸ்பிரயோகத்தையும் மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் அவருக்கு எதிராக குற்றவியல் பிரேரணை முன்வைக்கப்பட்டு பதவி நீக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.