கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 1.5 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
டுபாயில் இருந்து பிரவேசித்த விமானம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இது மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பெறுமதி 15 மில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

