காணாமல் ஆக்கப்பட்டடோர் தொடர்பான போராட்டத்தை கண்டுகொள்ளாதுவிட்டால், மக்கள் களைப்பில் அமைதியடைந்துவிடுவார்கள் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனவே மக்களது போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.
காணாமல் போனோர் விவகாரம் தற்போது சர்வதேச அளவில் முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகள் இந்த விடயத்தில் இலங்கையுடன் கரிசனைக் கொண்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

