விரைவில் நீர் கட்டணம் சீர்த்திருத்தப்படும் என நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஊவா மாகாண காரியாலய அங்குரார்பன நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எத்தகைய எதிர்ப்புக்கள் வந்தாலும் நீர் கட்டம் சீர்த்திருத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலவசமாக கிடைக்கின்ற நீரை விநியோகிப்பதற்கு அதிக அளவான கட்டணம் அறவிடப்பட வேண்டுமா? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
எனினும் நீரை சுத்திகரித்து கிரமமாக விநியோகிப்பதற்கு பாரிய செலவினங்கள் ஏற்படுகின்றன.
இதனால் நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

