விசேட தேடுதல் நடவடிக்கை – 2 ஆயிரத்து 925 பேர் கைது

423 0

சகல காவற்துறை நிலையங்களினதும் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது 2 ஆயிரத்து 925 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர மேலும் 575 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

சகல காவற்துறை நிலையங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 10 ஆயிரத்து 756 காவற்துறை அதிகாரிகள் இந்த விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, ஆயிரத்து 570 பேர் விசாரணை மேற்கொள்வதற்காக கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த 739 பேரும், குற்ற செயல்களில் ஈடுபட்ட 112 பேரும், கஞ்சா மற்றும் மதுபான போத்தல்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 504 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இரவு நேரங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட வீதி சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 575 பேரல் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.