இலங்கையைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவர் குவைட்டில் கைது

304 0

இலங்கையைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவர் குவைட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த நாட்டின் குற்றத் தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டு, உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஏ.பி. என்று அறியப்படும் அவர், 250 குவைட் டினார்களுக்கு பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி பலருடன் பணம் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

அவர் ஜலீப் அல் சுயோக் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.