இலங்கை வருகிறார் சசி தரூர்

304 0

இந்தியாவின் முன்னாள் ராஜதந்திரியும், விருதுபெற்ற எழுத்தாளர் மற்றும் பேச்சாளரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான சசி தரூர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அடுத்த வாரம் அவர் இலங்கைக்கு வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சுயசரிதை நூல் ஒன்று எதிர்வரும் புதன்கிழமை கொழும்பில் வெளியிடப்படவுள்ளது.

இதில் உரையாற்றுவதற்காக அவர் இலங்கை வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இந்த நிகழ்வில் இலங்கை – இந்திய – சீனா உறவின் சமநிலை குறித்து உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.