ருகுணு பல்கலைகழகத்தின் இரண்டு பீடங்கள் தற்காலிகமாக மூடல்

304 0

ஒரு வகை காய்ச்சல் பரவுவதன் காரணமாக ருகுணு பல்கலைகழகத்தின் விவசாய மற்றும் தொழில்நுட்ப பீடங்கள் இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

பல்கலைகழக உப வேந்தர் பேராசிரியர் காமினி சேனாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கிடையே பரவியுள்ள ஒரு வகை காய்ச்சல் தொற்றாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மருத்துவர்கள் வழங்கிய பரிந்துரைகளுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய மாத்தறை – மாபலானேயில் அமைந்துள்ள விவசாய பீடமும் வெல்லமடம வளாகத்தில் அமைந்துள்ள தொழில்நுட்ப பீடமும் மூடப்பட்டுள்ளதாக ருகுணு பல்கலைகழக உபவேந்தர் தெரிவித்துள்ளார்.